ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன் மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில் புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும் துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய் சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே