ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப் பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப் புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன் செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன் செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே