ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும் பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் எய்யாத() அருட்சோதி என்கையுறல் வேண்டும் இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும் நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும் நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே () எய்யாத - அறியாத முதற்பதிப்பு