ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் கையாது கண்களும்விட் டகலாதே இன்னும் காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன் எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே