ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே அருள்ஒளித் திருவைநின் தனக்கே மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம் விரைந்திரண் டரைக்கடி கையிலே கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும் களிப்பொடு மங்கலக் கோலம் வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக என்றனர் மன்றிறை யவரே