ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம் அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம் தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந் திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக் களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய் சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும் தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே