ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந் தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப் பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப் பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே