ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற வசியர் மிகநீ ரென்றேனென் மகனே யென்றார் வளர்காமப் பசிய துடையே னென்றேனுட் பணியல் குலுமப் படியென்றார் நிசிய மிடற்றீ ராமென்றேன் நீகண் டதுவே யென்றாரே
ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப் பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ