ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர் வெட்டியே என்கோ வெட்டியில்() எனக்கு விளங்குறக் கிடைத்தஓர் வயிரப் பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்கக் கட்டியே என்கோ அம்பலத் தாடும் கருணையங் கடவுள்நின் றனையே () கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு