ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றார் எண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிதற்கென்றார் அண்கொ ளணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா ரெண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென் றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ