ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும் பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே