ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த ஊத்தையேன் நாத்தழும் புறவே வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற பகடெனத் திரிகின்ற படிறேன் நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே