ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய் இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே