ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால் நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி நாதனைக் கண்டவன் நடிக்கும் மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல மருந்துகண் டுற்றது வடிவாய் நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே