ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் நன்றேநின் றீர்இங்கு வாரீர் வாரீர்
ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச் சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி பத்திஎலாம் பெற்ற பலன்
ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம் நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம் இடம்புரிக வாழ்க இசைந்து