ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக் குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே