ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன் தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் தப்பிலா - முதற்பதிப்பு, பொசு, ச மு க பதிப்பு