ஒப்பிலாய்உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ வெப்பில்ஆழ்ந் தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத் துழன்ற இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின்அருள் கிடைக்கும் துப்புர வொழிந்தோர்உள்ளகத் தோங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே