ஒருக ணப்பொழு தேனுநின் அடியை உள்கி டாதுளம் ஓடுகின் றதனால் திருக ணப்பெறும் தீயனேன் செய்யும் திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ மாயு மோஎன மயங்குவேன் தன்னை அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே