ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான் வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன் றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ