ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம் பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச் செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில் காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே