ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித் திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக் கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின் வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம் பாடாண் திணை கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் (வினா உத்தரம்) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்