ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப் பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும் அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி