ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப் பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே