ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில் ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப் பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன் கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே