ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன் இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர் மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார் அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோ வென்றே னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர் மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ