ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற் கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன் பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ