ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம் உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும் மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச் சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண் அலிவகையல் லாதவகை கடந்து நின்ற அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே