ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே அல்லார் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார் பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே