ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல் சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே