ஒளவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச் செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக நிரந்தொன்றாய் நின்றான் நிலத்து