ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும் வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே