Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2599
ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும் உற்றிடில் சிறுது ரும்பும்

உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என உயர்மறைகள் ஓர்அ னந்தம்
தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித் தியானம் இல்லா மல்அவமே

சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால் சேராமை எற்க ருளுவாய்
களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு கருணைதரு கலாப மயிலே

கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட் கலைகி ளரவளர் அன்னமே
அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே

அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.