ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய் ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய் வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே