ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் களியொன் றருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்