ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே