ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே