ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக் குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல் புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள் பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன் பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர் தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே