Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4329
ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம் 
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம் 
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் 
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்  ஆடிய
பாடல் எண் :4445
ஓங்கார நாடகம் பாங்காகச்() செய்கின்ற 

ஓங்கார நாடரே வாரீர் 

ஆங்கார நீக்கினீர் வாரீர்  வாரீர்   

 () பாங்காரச் - பி இரா
பாடல் எண் :5440
ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம் 

உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே 
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார் 

இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ 
ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ 

தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை 
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே 

உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.