ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார் உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன் வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன் விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார் தனய நின்திருத் தணிகையை அடையேன் ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே என்செய் வான்பிறந் தேன்எளி யேனே