ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன் தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே