ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத் தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள் வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும் பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே