ஓட உன்னியே உறங்குகின் றவன்போல் ஓங்கும் உத்தம உன்அருட் கடலில் ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய் நாட உன்னியே மால்அயன் ஏங்க நாயி னேன்உளம் நண்ணிய பொருளே தேட உன்னிய மாதவ முனிவர் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே