ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண் உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல் வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க் கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக் கோயில் மேவிநம் குடிமுழு தாளத் தாள்த லந்தரும் நமதருள் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே