ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின் ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய் வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ் வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ நாடு கின்றவர் நாதன்தன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே