ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே