ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால் தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத் தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே