ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென் றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும் மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே தாயாகித் தந்தையார்த் தமராய் ஞான சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே