Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1257
ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம் 
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச் 
சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ 
ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே
பாடல் எண் :1430
ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில் 
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ 
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி 
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :1508
ஓவா நிலையார் பொற்சிலையார் 

ஒற்றி நகரார் உண்மைசொலும் 
தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
பூவார் முடியாள் பூமுடியாள் 

போவாள் வருவாள் பொருந்துகிலாள் 
ஆவா என்பாள் மகளிரொடும் 

ஆடாள் தேடாள் அனம்என்றே
பாடல் எண் :4061
ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத் 
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன் 
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே
பாடல் எண் :4631
ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி 

உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே 
சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க 

சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை 
ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன் 

ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித் 
தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது 

சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.