கங்கைகொண் டோ ன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய் நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத் தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே
கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர் சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே